Search
Friday 22 November 2019
  • :
  • :

அமெரிக்காவின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிற்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது: 50 மருத்துவர்கள் 15 மணிநேரம் ஈடுபட்டனர்

அமெரிக்காவின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிற்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது: 50 மருத்துவர்கள் 15 மணிநேரம் ஈடுபட்டனர்

அமெரிக்காவின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிற்சை  வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக ஆணுறுப்பு அகற்றப்பட்ட 64 வயதுடைய தோமஸ் மானிங் என்பவருக்கே பொஸ்டனில் உள்ள பொது வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிற்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு கொடையாளி வழங்கிய ஆணுறுப்பை இவருக்கு பொருத்துவதற்கான இந்த சத்திரசிகிற்சை சுமார் 15 மணித்தியாலங்கள் நடைபெற்றது. இதில் சுமார் 50 க்கும் அதிகமான சத்திரசிகிற்சை நிபுணர்களும், மருத்துவர்களும், தாதியர்களும் கலந்துகொண்டனர். இம்மாதம் இடம்பெற்ற இந்த சத்திரசிகிற்சையின் பின்னர் நோயாளி நன்றாக குணமடைந்து வருவதாக இன்று திங்கட்கிழமை இதுபற்றி தகவல் வெளியிட்ட மருத்துவர்கள், இதனை ஒரு பெரும் திருப்புமுனை என்றும் சத்திரசிகிற்சையில் எட்டப்பட்ட ஒரு மைல்கல் என்றும் வர்ணித்துள்ளனர்.

கொடையாளியின் மிகவும் சிக்கலான கலங்களையும் நரம்புக் கட்டமைப்புக்களையும் கொடை பெறுபவரின் ஒத்த கட்டமைப்புக்களுடன் பொருத்துவதே இந்த சத்திர சிகிற்சையாகும். இந்த மாற்று சத்திரசிகிற்சை மூலம் ஒருவர் தனது சிறுநீரை வெளியேற்றுவதற்கும் உடலுறவில் ஈடுபடு உதவுவதுமே இதன் நோக்கமாகும் என்றும் அவர்கள் குழந்தைகளை பெறுவது நோக்கமல்ல என்றும் மருத்துவ நிபுணர் டிக்கன் கோ தெரிவித்தார். இவ்வாறு மாற்று சத்திர சிகிற்சை செய்பவருக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதன் உண்மையான தந்தை யாராக இருக்கமுடியும் என்ற என்ற ஒழுக்க ரீதியான ( ethical issues) விடயங்களே இதற்கான காரணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

16TRANSPLANT2-master675

இந்த வெற்றிகரமான ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிற்சை யுத்த களங்களில் காயம் அடைந்து தமது ஆணுறுப்புக்களை இழந்துள்ள அல்லது காயம் அடைந்துள்ள இராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

உலகின் முதலாவது ஆணுறுப்பு சத்திரசிகிற்சை தென் ஆபிரிக்காவில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு சீனாவில் விபத்து ஒன்றில் தனது ஆணுறுப்பின் பெரும் பகுதியை இழந்த 44 வயதுடைய ஒருவருக்கு கோமா நிலையில் இருந்த 22 வயதுடைய ஒருவரின் ஆணுறுப்பு வெற்றிகரமாக போருத்தப்படட்போதும், சத்திர சிகிற்சையின் நோயாளி மிக மோசமான உளவியல் பாதிப்புக்களுக்கு உள்ளானதால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க 15 நாட்களில் மீண்டும் அது அகற்றப்பட்டது.

penile-transplant-exlarge-169

தென் ஆபிரிக்காவில் 2014 ஆம் ஆண்டு உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிற்சை மேற்கொள்ளப்பட்டபோது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *