Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஊடகங்கள் எனது நிர்வாகம் குறித்து சொல்வதெல்லாம் பொய்- டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க ஊடகங்கள் எனது நிர்வாகம்  குறித்து சொல்வதெல்லாம் பொய்-  டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க மக்களிற்கான தனது வாக்குறுதிகளை ஓவ்வொரு நாளும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தனது நிர்வாகம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் உண்மையை தெரிவி;ப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியாவதை குறி;க்குமுகமாக இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அமெரிக்க ஊடகங்களை நேர்மையற்றவை தகுதியற்றவை எனவும் டிரம்ப் சாடியுள்ளார்.
எனது நிர்வாகம் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஓவ்வொரு நாளும் நிறைவேற்றி வருகின்றதுஇமக்கள் இது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்படுவீர்கள் என்ற செய்தியை உலக நாடுகளிற்கு தனது நிர்வாகம் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *