Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவுஸ்திரேலியாவின் பிரஜா உரிமை சட்டத்தில் முக்கிய மாற்றங்கள்- பிரதமர் அதிரடி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் பிரஜா உரிமை சட்டத்தில் முக்கிய மாற்றங்கள்- பிரதமர் அதிரடி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் பிரஜா உரிமை குறித்த சட்டங்களில் பாரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்போவதாக பிரதமர் மல்கம் டேர்ன்புல் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு அனுமதிக்கும் தற்காலிக விசாவை இரத்துச்செய்யப்போவதாக சில நாட்களிற்கு முன்னர் அறிவித்துள்ள நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரஜாவுரிமை குறித்த சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் குடியேற்ற திட்டங்கள் நாட்டிற்கு நன்மை அளிப்பதை உறுதிசெய்யமுடியும் எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா அதன் விழுமியங்களை தழுவுவதற்கு தயாரானவர்களை ,அதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவபர்களை கவருவதற்கு தொடர்ந்தும் முயலவேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் அவர்கள் எந்த இனத்தவர்கள் அல்லது மதத்தவர்கள் என்பது முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரஜா உரிமை என்பது பெரிதும் மதிக்கப்படவேண்டிய விடயம் என மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர் அவுஸ்திரேலியாவின் பிரஜா உரிமையை பெறுபவர்களின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் எங்கள் கலாச்சார விழுமியங்களுடன் ஓத்துப்போவதை உறுதிசெய்யும் விதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *