தலைப்பு செய்திகள்

எந்தவேளையும் அமெரிக்க- வடகொரிய யுத்தம் ஏற்படலாம் என்ற நிலையில் ரஷ்ய துருப்புக்கள் வடகொரிய எல்லையை நோக்கி நகர்வு

எந்தவேளையும் அமெரிக்க- வடகொரிய யுத்தம் ஏற்படலாம் என்ற நிலையில் ரஷ்ய துருப்புக்கள் வடகொரிய எல்லையை நோக்கி நகர்வு

வடகொரியாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையே பாரிய யுத்தம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஸ்யா தனது துருப்புக்களையும் ஆயுதங்களையும் தனது வடகொரிய எல்லையை நோக்கி அனுப்பி வருவதாக தெரிவிக்கபப்டுகிறது.

கடந்த சில நாட்களாக மிகப்பெரும் அளவில் ரஷ்ய இராணுவமும் ஆயுத தளபாடங்களும் ரயில்கள் மற்றும் வாகனங்கள் வழியாக வடகொரிய எல்லையை நோக்கி செல்வதை பொதுமக்கள் கண்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு ரயிலில் தரையில் இருந்து விண்ணுக்கு பாயும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உட்பட ஏராளமான ராணுவ தளபாடங்கள் ரஷ்ய- வடகொரிய எல்லையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலையில் உள்ள விலடிவோஸ்டாக் என்ற இடத்துக்கு கொண்டுசெல்லபப்டும் காணொளி கட்சி ஒன்றை ரஷ்ய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து இவ்வாறு ஆயுதங்களுடன் செல்லும் ம்மூன்றாவதி ரேயோல் இது என்று உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார். பாரிய கனரக வாகனங்களில் பல ராணுவ உலங்கு வானூர்திகளும் கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வட கொரியாவின் கடந்த ஞாயிறுக்கிழமையன்றைய ஏவுகணை சோதனையை நேற்று ஐ. நா பாதுகாப்பு சபை கடுமையாக கண்டித்துள்ளது. வட கொரியா தனது அணுஆயுத சோதனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் வடகொரியாவுக்கு எதியோராக கடுமையான தடைகள் மேற்கொள்ளபப்டும் என்றும் ரஸ்யா உட்பட பாதிஉகப்பு சபா உறுப்பு நாடுகள் கூட்டாக கண்டனம் வெளியிட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா கொண்டுவந்த இந்த கண்டன தீர்மானம் ரஸ்யாவின் கடுமையாக எதிர்ப்பின் பின்னர் பல வசனங்கள் மாற்றி அமைக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணப்படவேண்டும் என்ற வாசகம் ரஸ்யாவின் வற்புறுத்தனலினால் இந்த தீர்மானத்தில் புகுத்தப்பட்டது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு முன்னர் பாதுகாப்பு சபையில் வடகொரியாவுக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை வட கொரியாவின் பிரதான ஆதரவு நாடான சீனா ஆதரித்திருந்தபோதிலும் ரஸ்யா அதனை ரஸ்யா தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 3 4 5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *