செய்திகள்

‘ஒபாமாவை’ விட ‘புட்டின்’ சிறந்த தலைவர் என்று டிரம்ப் சர்ச்சையான கருத்து

பராக் ஒபாமாவை விட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சசிறந்த தலைவர் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நியூ யோர்க்கில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டனுடனான விவாதம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ரஸ்யா உலக ஸ்திரத்தன்மைக்கான விதைகளை விதைக்கிறது என்று அமரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகன் கூறியிருந்த அதே தினம் டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது நாட்டினை புட்டின் சிறந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.