Search
Monday 26 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிரியாவின் வான்வெளிப்பாதுகாப்பு கட்டமைப்பை அழித்துவிடுவோம்- இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

சிரியாவின் வான்வெளிப்பாதுகாப்பு கட்டமைப்பை அழித்துவிடுவோம்- இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

சிரியா தனது விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டால் சிரியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறைகளை அழித்துவிடுவோம் என இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்அவிக்டர் லிபேர்மன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
அடுத்த முறை எங்கள் விமானங்களிற்கு எதிராக சிரியா தனது வான்வெளி பாதுகாப்பு பொறிமுறைகளை பயன்படுத்தினால் நாங்கள் எந்தவித யோசனையும் இன்றி சிரியாவின் வான்வெளிப்பாதுகாப்பை அழிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் சிரியா இஸ்ரேலிய விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது
ஈரானிலிருந்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பிற்கான ஆயுதவிநியோகம் இடம்பெறுவதை கண்காணித்துக்கொண்டிருந்த வேளையே தனது விமானங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆயுதங்கள் பரிமாறப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *