தலைப்பு செய்திகள்

சிரிய படையினரின் வாகனத்தொடரணியை இலக்குவைத்தது அமெரிக்கா

சிரிய படையினரின் வாகனத்தொடரணியை இலக்குவைத்தது அமெரிக்கா

சிரிய படையினரின் வாகனத்தொடரணியை இலக்குவைத்து அமெரிக்கா மேற்கொண்ட விமான தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியஅரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஜோர்தான் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சிரியா தெரிவித்துள்ளது.

சிரிய படையினரின் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவெனவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்களும் மேற்குநாட்டு படையணிகளும் காணப்பட்ட பகுதியை நெருங்கியதை தொடர்ந்தே சிரியாவின் இராணுவ தொடரணி தாக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து முன்கூட்டியே ரஸ்யாவிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவை குறிப்பிட்டுள்ளன.

பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அதனை அலட்சியம் செய்து விட்டு சிரிய வாகனத்தொடரணி நெருங்கி வந்தவேளையே அது தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரிய மற்றும் ஈரானிய ஆதரவு ஆயுதக்குழுக்களின் வாகனத்தொடரணியே தாக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *