Search
Saturday 20 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலிபானிடம் கைதிகளாகயிருந்த மேற்குலக குடும்பத்தினரை பாக்கிஸ்தான் இராணுவம் மீட்டுள்ளது.

தலிபானிடம் கைதிகளாகயிருந்த மேற்குலக குடும்பத்தினரை பாக்கிஸ்தான் இராணுவம் மீட்டுள்ளது.

தலிபானிடம் ஐந்து வருடங்களிற்கு மேல் கைதிகளாகயிருந்த மேற்குலக தம்பதியினரை விடுவித்துள்ளதாக பாக்கிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குராம்பழங்குடி இன மக்களின் பகுதியில் இவர்களை தலிபானின் பிடியிலிருந்து மீட்டுள்ளதாக பாக்கிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாக்கிஸ்தான் இராணுவத்தினர் ஐந்துமேற்குலகத்தவர்களை தலிபானின் பிடியிலிருந்து விடுவித்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கனடா பிரஜை அவரது அமெரிக்க மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையே விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாக்கிஸ்தான் இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடாதபோதிலும் 2012 இல் கடத்தப்பட்ட கனடாவை சேர்ந்த குடும்பமொன்றையே இவர்கள் விடுவித்திருக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *