Search
Monday 9 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மோசமான உளவியல் காயங்களின் பிடியில் சிக்கியுள்ள மௌசூல் குழந்தைகள்-நிபுணர்கள் எச்சரிக்கை

மோசமான உளவியல் காயங்களின் பிடியில் சிக்கியுள்ள மௌசூல் குழந்தைகள்-நிபுணர்கள் எச்சரிக்கை

நன்றி- கார்டியன்

மௌசூல் நகரில் ஐஎஸ் அமைப்பின் பிடியில் பல மாதங்கள் வாழ்ந்ததன் காரணமாக அந்த நகரின் குழந்தைகள் கடும் உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ள குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர் அவர்களால் ஏனைய குழந்தைகள் போன்று விளையாடமுடியவில்லை அவர்களை கனவுகள் அச்சமடையச்செய்கின்றன என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

5760 (1)
மிகமோசமான வன்முறையை நேரில் பார்த்தன் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதன் காரணமாக அவர்கள் மத்தியில் கடும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன அவற்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மௌசூல் நகரிலிருந்து தப்பி ஹமாம் அல் அலி முகாமில் தஞ்சமடைந்துள்ள 65 குழந்தைகளை சேவ்த சில்ரன் அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இவ்வாறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குழந்தைகளிலும் கடும் மன அழுத்தம தென்பட்டுள்ளது. அவர்கள் தங்களிற்கு மிகவும் நெருக்கமானவர்களில் எவரையாவது இழந்துள்ளனர்- பயங்கர கனவுகளால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் குடும்பத்தவர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை அவர்கள் மிகவும் தாமதமாகவே புரிந்துகொள்கின்றனர்.தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர்.

ஹமாம் அல் அலி முகாமி;ல் உள்ள 10 ற்கும் 15 வயதிற்கும் உட்பட சிறுவர்கள் தாங்கள் நேரில் கண்ட பயங்கரங்களை விபரித்துள்ளனர். அவர்களிற்கு முன்னாள் குடும்பத்தவர்கள் கொல்லப்பட்டது, கொல்லப்பட்டவர்களின் உடல்களை நேரில் பார்த்தது ,வீதிகளில் குருதி வழிந்தோடுவதை பார்த்தது போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தங்கள் உறவினர்கள் சினைப்பரிற்கு பலியானது குறித்தும் நிலக்கண்ணி வெடிகளில் சிக்குண்டமை குறித்தும் விமான குண்டுவீச்சுகள் குறித்தும் விபரித்துள்ளனர். ஐஎஸ் அமைப்பின் விதிமுறைகளை மீறியவர்களிற்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அவர்களை கலவரப்படுத்தியுள்ளன.

பிரார்த்தனை நேரத்தில் வீதியில் காணப்பட்டால் தண்டனை வழங்குவார்கள் வீதிகளில் தலைகள் துண்டிக்கப்படுவதும் மரண தண்டனை வழங்கப்படுவதும் அடிக்கடி இடம்பெறும் தங்களால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் உடல்களை அவர்கள் பல நாட்களிற்கு வீதியில் தொங்கவிடுவார்கள் என 13 சிறுவன் ஓருவன் தெரிவித்துள்ளான்.

சேவ் த சில்ரன் அமைப்பின் மத்திய கிழக்கிற்கான தலைமை மனோநல மருத்துவர் முகாமில் உள்ள குழந்தைகள் சிரிப்பதேயில்லை அவர்கள் சிறுவர்களாகயிருப்பதற்கான திறனை இழந்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் கீழ் அவர்கள் வாழ்ந்ததும் அதன் பின்னர் உயிரை பின்னர் அங்கிருந்து தப்பியோடியதும் அவர்களை உளரீதியில் மிக மோசமாக காயப்படுத்தியுள்ளது சிறுவர்கள் தற்போதைக்கு குணமாகப்போவதில்லை பல வருடங்களிற்கு அவர்களிற்கு ஆதரவு அவசியம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *