Search
Friday 24 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிவரும்போது சுடப்பட்ட இராணுவவீரர் ஆபத்தான நிலையில்

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிவரும்போது சுடப்பட்ட இராணுவவீரர்  ஆபத்தான நிலையில்

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிவந்த படைவீரர் மீது ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்ட்டுள்ளதாகவும் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தென்கொரியாவின் பன்முன்ஜொம் கிராமத்தின் ஊடாக வடகொரிய படைவீரர் ஓருவர் திங்கட்கிழமை தென்கொரியாவிற்குள் நுழைந்திருந்தார் அவர் தென்கொரியாவிற்குள் தப்பிச்செல்வது தெரியவந்ததும் வடகொரிய படையினர் அவர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட நபர் எல்லையை நோக்கி வாகனத்திலேயே பயணம் செய்தார் எனினும் வாகனம் பழுதடைந்ததால் அவர் நடந்து எல்லையை கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவரை நோக்கி 40ற்கும் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகங்கள் மேற்பட்டன அதில் ஐந்து அவரை தாக்கியுள்ளது அவர் இலைகளிற்குள் மீட்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவரிற்கு இன்னமும் சுயநினைவு திரும்பவில்லை அவர் சுவாசிப்பதற்கு சிரமப்படுகின்றார் அவரை காப்பாற்ற முடியும் என நினைக்கின்றோம் என தென்கொரிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அவரது உடலில் .இருந்து ஐந்து துப்பாக்கிரவைகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
குறிப்பிட்ட நபர் எல்லையை நோக்கி வாகனத்தில் வந்துகொண்டிருந்தார் அதனை நாங்கள் பார்த்தோம் தீடீர் என அவரது வாகனச்சில்லு பழுதடைந்தது அவர் பின்னர் அதிலிருந்து இறங்கி தென்பகுதி நோக்கி ஓடி வந்தார் அப்போது வடகொரிய பக்கத்திலிருந்து துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என தென்கொரிய படையினர் தெரிவித்துள்ளனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *