Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வான் ஓன்றின் பின்னால் மறைந்திருந்த நபர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டார்- பாரிஸ் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரிப்பு

வான் ஓன்றின் பின்னால் மறைந்திருந்த நபர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டார்- பாரிஸ் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை நேரில் பார்த்த பலர் அது குறித்து அச்சத்துடன் விவரித்துள்ளனர்
ஆயுதமேந்திய நபர் காவல்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதும் எவ்வாறு பதட்ட நிலை உருவானது என்பதை அவர்கள் விபரித்துள்ளனர்
துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் பின்னர் தான் நபர் ஓருவரின் உடலை பார்த்ததாகவும் பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார்
மக்கள் அச்சத்தினால் அழுதபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு நபர் கார் ஓன்றில் நபர் ஓருவர் வந்து இறங்கியதை தான் பார்த்தாக குறிப்பிட்டுள்ளார்
அவர் அங்கிருந்த பொலிஸ் வானிற்கு அருகில் தனது காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியுடன் இறங்கினார் அதன் பின்னர் ஆறு துப்பாக்கிவேட்டுகள் கேட்டன அவர் வான் ஓன்றின் பின்னால் மறைந்திருந்தவாறே காவல்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்
அவர் ஓரு காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்றார்- அந்த நபர் நினைத்திருந்தால் பல பொலிஸாரை கொலை செய்திருக்கலாம் ஆனால் அவர் காவல்துறையினரை இலக்குவைத்தே தாக்குதலை மேற்கொண்டார் அதிஸ்டவசமாக அந்த நபரை இன்னொரு காவல்துறை உத்தியோகத்தர் சுட்டுக்கொன்றார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *