Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளை மாளிகைக்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டம்

வெள்ளை மாளிகைக்கு  வெளியே பாரிய ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே சூழல் ஆர்வாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியடைந்த தினத்திலேயே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
சுழல் பாதுகாப்பு குறித்த டிரம்பின் கொள்கை தவறானது என தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னைய நிர்வாகத்தின் கால நிலை கொள்கையை டிரம்ப் பின்பற்றவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க காங்கிரஸிற்கு அருகிலிருந்து புறப்பட்டு வெள்ளை மாளிகையை சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் முன்னைய ஆட்சியாளர்கள் சூழலை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை கைவிடுவது என டிரம்ப நிர்வாகம் தீர்மானித்துள்ளமை குறித்து தாங்கள் சீற்றமடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சூழல் மாசடைவதால் எங்கள் பிள்ளைகள் நோய்வாய் படுகின்றனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *