செய்திகள்

சர்வதேச நீர் தினம் இன்று : கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வு

சர்வதேச நீர் தினத்தையொட்டி நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சும் , தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையும் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று காலை 9 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு  அரம்பமாகவுள்ளது.

”சுத்தமான நீரும் தொழில் வாய்ப்புகளும்” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் இதில் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் , இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ.அன்சார் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளதுடன் நீர் தினம் தொடர்பாக பேராசியர் சரத் விஜேசூரிய விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை நீர் தினத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெறவுள்ளது.