செய்திகள்

சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானம்

சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி, நாட்டின் பாதுகாப்பு குறித்து விஷேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற சில அனாமத்தேய அழைப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளை அப் பகுதிகளில் மீள்குடியேறிய மக்களுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

n10