செய்திகள்

சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை  நடைபெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான இலவச மார்பக புற்று நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான பரிசோதனை முகாம் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள டபுள்யூ. சி.எப் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைஇ தி.நகர் டபுள்யூ, சி.எப். மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படும் இந்த மருத்துவப்பரிசோதனை முகாமை சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகர் ராதிகா சரத்குமார் ஆரம்பித்து வைக்க மருத்துவமனை இயக்குநர்கள் ராஜசேகர், சேவியர் ஜமீலா ஆகியோர் முதன்மை வகிக்கிறார்கள். பாலகார்த்திகா வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்ரகாஷ், சென்னை மண்டல செயலாளர் சேவியர், மாவட்ட செயலாளர்கள், மத்திய சென்னை கிழக்குஇ சி.ராஜா, தென் சென்னை கிழக்கு நாதன், தென் சென்னை மேற்கு பொன்னரசன், மத்திய சென்னை மேற்கு பிரசாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பெண்கள் முழு உடல் பரிசோதனை, மார்பக புற்று நோய் பரிசோதனை, ரத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். தேவைப்படுவோருக்கு ஸ்கேன் சேவையும் இலவசமாக வழங்கப்படும். இந்த மருத்துவ முகாமில் மகளிர் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.