செய்திகள்

சர்வதேச மகளிர் தினமான இன்று யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் போராட்டங்கள்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த தீப்பந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.இன்று முற்பகல் 11 மணிக்கு, நல்லூர் பின் வீதியிலுள்ள போராட்ட களத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இப்பேரணி நாவலர் வீதியிலுள்ள ஐ.நா.அலுவலகம் வரை செல்லவுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் முற்பகல் 10 மணி முதல் இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.(15)