சர்வதேச மத்தியஸ்த நிலையத்தை திறந்து வைத்த ரணில் !
கொழும்பு உலக சந்தை நிலையத்தில் சர்வதேச மத்தியஸ்த நிலையத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக் காலை திறந்து வைத்தார்.
இது இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை கொண்டு வருவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இன்றைய வைபவத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
இலங்கையில் இத்தகைய நிலையமொன்று இல்லாததால் சிங்கப்பூர் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச மத்தியஸ்த சேவைகளைப் பெற வேண்டி இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இச்சேவையைப் பெறுவதால் பெருந்தொகை பணத்தையும் செலவிட நேரிட்டது.
1995 ஆம் ஆண்டின் 11 ஆவது மத்தியஸ்த சட்டத்தின் கீழ் உள்ளூரில் இரு மத்தியஸ்த நிறுவனங்கள் இலங்கையில் இயங்கிய போதும், சர்வதேச மத்தியஸ்த நிலையம் உருவாவது இதுவே முதல் தடவையாகும்.