செய்திகள்

சர்வதேச விசாரணைக் கூண்டில் இலங்கையை நிறுத்த தமிழ்த் தலைவர்கள் முயற்சி: நிமால் குற்றச்சாட்டு

இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணைக்­கூண்டில் நிறுத்த தமிழ் தலை­மைகள் முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்தும் எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றை­யினை சர்­வ­தே­சத்தின் தேவைக்­கேற்ப மாற்­றி­ய­மைக்­கவே முயற்­சிக்­கின்­றனர் எனவும் குறிப்­பிட்டார். வடமாகாண சபையின் தீர்மானம் இலங்கையை சர்வதேச விசாரணைக்கூண்டில் நிறுத்தும் முயற்சியே எனவும் தெரிவித்திருக்கின்றார்.

“விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான ஆயுதப் போராட்­டத்தில் சிங்­கள மக்கள் பல இழப்­புக்­களை சந்­தித்­தனர். நாடு மிகவும் பின் தங்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டது. எனினும் எமது இரா­ணு­வத்தின் தியா­கமும் அர­சாங்­கத்தின் முயற்­சி­யுமே விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வா­தி­க­ளிடம் இருந்து நாட்­டையும் மக்­க­ளையும் மீட்­டெ­டுக்க துணை புரிந்­தது. யுத்­தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் தமது சுதந்­தி­ரத்­தினை வென்­றெ­டுத்­துள்­ளனர்.

சுயா­தீ­ன­மா­ன­தொரு தேர்தல் அங்கு நடத்­தப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­ன­ரையும் குறைத்து மக்­களை வாழக்­கூ­டிய சூழ்­நி­லைக்கு கொண்டு சென்றோம். அதேபோல் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நேர­டி­யாக பொது அணிக்கு ஆத­ரவு வழங்கி தமது நிலைப்­பாட்­டினை தெரி­வித்­தனர். இதில் பொது எதி­ர­ணி­யு­ட­னான உடன்­ப­டிக்­கைகள் புரிந்­து­ணர்­வு­க­ளு­ட­னேயே கைகோர்த்­தனர்.

அவ்­வா­றா­ன­தொரு நிலையில் மீண்டும் நாட்டை குழப்­ப­க­ர­மான சூழ­லுக்கு கொண்டு செல்­லவே வட­மா­காண சபை முயற்­சிக்­கின்­றது. வட­மா­காண சபையில் இறு­தி­யாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையும் நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.