செய்திகள்

சர்வதே விசாரணையை விரும்பும் இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள்.

டீடபில்யு- ஜேர்மன் சர்வதேச செய்தி தளம் ஒன்றில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மே 19 2009 இல் முடிவடைந்தவேளை முல்லைத்தீவை சேர்ந்த மயூரன்  மலேசியாவில் கல்விகற்றுவந்தார்,யுத்தத்திற்கு பிந்திய மாதங்களில்மயூரனின் பெற்றோர்கள் உட்பட  ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணமற்போயினர்,படையினர் எப்படி வெள்ளை வான்களில் சுற்றிவளைத்து கொண்டுசென்றனர் என்பதை கண்ணால் கண்டவர்கள் விபரித்துள்ளனர்,இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்கள் திரும்பிவரவேயில்லை,தனது பெற்றோர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக மயூரன் மீண்டும் இலங்கைக்கு அவர்களை தேடிச்சென்றார்,எனினும் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற வேளை கைதுசெய்யப்பட்டார்.என்னை இராணுவமுகாமிற்கு அழைத்துச்சென்றனர்,நான்விடுதலைப்புலிகள் இயக்கத்தைசேர்ந்தவன் என தெரிவிக்கும் ஆவணத்தில் கைச்சாத்திடுமாறு அவர்கள் என்னை பலவந்தப்படுத்தினர்,நான் இலங்கையிலேயே வாழவில்லை என தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதனை நம்பவில்லை என மயூரன் எம்மிடம் தெரிவித்தார். தான் பலவாரங்களாக தடுத்துவைக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்தார்,அதனால் ஏற்பட்டவலி மிகமோசமானதாக காணப்பட்டது, விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் இல்லாதபோதிலும் அவர் வாக்குமூலத்தில் கைச்சாத்திட்டார்.

மனக்காயங்களும் வடுக்களும்
858f82bb-7fce-42ce-a26d-6bec6abd8cb9
சிலவேளைகளில் அவர்கள் ஓரு நாளிற்கு இரண்டு தடவை என்னை அறையொன்றிற்குள் கொண்டுசென்று வாக்குமூலத்தை பெறமுயல்வார்கள்,அவர்கள் எனது மூக்கை உடைத்தார்கள், எனது பற்களையும் உடைத்தார்கள்,தலையில் , கால்களில் தாக்கப்பட்;டேன்,என தெரிவித்த அவர் சித்திரவதை காரணமாக தனது உடலில் ஏற்பட்ட காயங்களை தழும்புகளை எங்களிற்கு காண்பித்தார்.
பலதமிழர்கள் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், பலர் தடுப்பிலிருந்து உயிருடன் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மயூரனின் குடும்பத்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
எனது நெருங்கிய உறவினர் ஓருவரை தேடிக்கொண்டிருந்த எனது பெற்றோர் தற்செயலாக என்னை கண்டுபிடித்தனர்,இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து என்னை விடுவித்தனர் என்கிறார்,மயூரன் அவர் பின்னர் பிரிட்டனிற்கு கல்விவிசா மூலம் வந்துசேர்ந்தார்.
சித்திரவதைக்குட்பட்டு அதிலிருந்து விடுதலையான வவுனியாவை சேர்ந்த 39 வயதான கலைராஜன் என்பவர் மே 2009 இல் தானும் தனது குடும்பத்தவர்களும் சரணடைந்த பின்னர் என்ன நடந்தது என்பதை எங்களிடம் விபரித்தார்.
அவரை அவரது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து வெள்ளைவான் ஓன்றின் முன்னாள் நிற்க வைத்தனர்,அந்த வானிற்குள் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கும் தமிழர் ஓருவர் காணப்பட்டார்,அவர் நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என இனம் கண்டால் வானின் ஹோனை அமுக்குவார்,அதன் பின்னர் அவர்கள் உங்களை தனியாக பிரித்து அழைத்துச்செல்வார்கள்.
அவர்ஹோனை அமுக்கிய வேளை எனது இதயம்இயங்காமல் நின்றுவிட்டது போல உணர்ந்தேன்,எனது உடல்நடுங்க ஆரம்பித்தது,வியர்க்க தொடங்கியது என தெரிவிக்கின்றார் கலைராஜன்,அவர்கள் அவரை நிர்வாணமாக்கினர்,தாக்கினர், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பினர்.அவர்கள் என்னை கொண்டுசென்ற அறை உங்களை அச்சத்தால் மயங்கவைக்ககூடியது,உள்ளே அவ்வளவு ஆபத்தான பொருட்கள் காணப்பட்டன, எங்கும் இரத்தக்கறை காணப்பட்டது , அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த சிலரின் உடலில் காயங்களை காணமுடிந்தது எனவும் அவர் எங்களிடம் தெரிவித்தார்.
பாலியல் சித்திரவதைகள்
கலைராஜன் தான் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என அவர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்து அவரது தலையை பொலித்தீனினால்மூடிபெட்ரோலை ஊற்றியுள்ளனர்,அவர் பல நிமிடங்கள் சுவாசிப்பதற்கு பலத்த சிரமப்பட்டுள்ளார்,பின்னர் அவர்கள் அதனை அகற்றியுள்ளனர், விடுதலைப்புலி உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் உத்தரவிட்டுள்ளனர். ஓரு முறை கலைராஜன் பாலியல் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.ஐந்து மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் அங்கிருந்து தப்பிய அவர் இந்தியாவிற்கு சென்று பின்னர் பிரிட்டனிற்கு சென்றுள்ளார், இவரிற்கும், மயூரனிற்கும் சித்திரவதையிலிருந்து விடுதலை என்ற அரசசார்பற்ற  அமைப்பு உதவிவருகின்றது.யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களிற்கு பின்னர் இருவரும் தங்கள் புகலிடக்கோரிக்கை வெற்றிபெறுமா என காத்திருக்கின்றனர்,60 வீதமானவர்களிற்கு இடம்பெறுவது  போல் இவர்களது கோரிக்கைகளும் முதற்கட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளனஇருவரும் மீண்டும் முறையீடு செய்துள்ளனர்.
Srilanka-feature
பரந்துபட்ட விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற அநீதிகள் மற்றும் காணமற்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை இணங்கியுள்ளது.எனினும் கொழும்பு சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பாலியல்வன்முறைகளும் சித்திரவதைகளும் இடம்பெற்றது என்பதை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது.எனினும் சித்திரவதையிலிருந்து விடுதலை அமைப்பின் உளவியல் சேவைகளிற்கான இணைத்தலைவர்களில் ஒருவரான வில்லியம் ஹொப்கின்ஸ் சித்திரவதைகள் இடம்பெற்றமைக்கான பெருமளவு ஆதாரங்கள் உள்ளதாககுறிப்பிடுகின்றார்.பாலியல் வன்முறை என்பது  வழமையான விடயமாக இடம்பெற்றுள்ளது,பலர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்,மூச்சுதிணறச்செய்தல் என்பது வழமையானதாக காணப்படுகின்றது,மேலும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் ஓருவரின் உடலில் மாறாதழும்புகளை  ஏற்படுத்துவது இடம்பெற்றது என்பதற்கான சட்டரீதியான மருத்துவ,ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன, சூடான இரும்பால் சுட்டுள்ளனர் என அவர் தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்டஇருவரும் தமிழ்சமூகத்தினை சேர்ந்த பலர் காணமற்போனது சித்திரவதை செய்யப்பட்டது குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையை வெளியிடுகின்றனர்.
சித்திரவதையிலிருந்து விடுதலை அமைப்பினால் சிகிச்சையளிக்கப்பட்ட ஏனையவர்களும் நீதிவழங்கப்படுவதில் காணப்படும் தாதமதம் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகின்றார் வில்லியம் ஹொப்கின்ஸ்.அவர்கள் உள்நாட்டு நீதிபதிகளால் விசாரணைகளை முன்னெடுக்கமுடியும் என நம்பவில்லை,அவர்கள் கலப்பு பொறிமுறையை நம்புகின்றனர்,என அவர் குறிப்பிட்டார்.