செய்திகள்

சல்மான் கானின் மும்பை இல்லம் முற்றுகை: மகிந்தவுக்கு ஆதரவளித்தமைக்கு எதிராக போராட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

மும்பையிலுள்ள அவரது இல்லத்தை இன்று காலை சுற்றிவளைத்த நாம் தமிழர் அமைப்பினர் சல்லாமன்கான், ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு எதிரான கோஷமெழுப்பினார்கள்.

கொழும்பு,  பொரளை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்தி நடிகர் சல்மான்கான் வீட்டை நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், ”நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்” எனவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.