செய்திகள்

சவுதியின் விமானதாக்குதலில் மாணவர்கள் பலி

சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகள் யேமனில் மேற்கொண்ட விமானதாக்குதலில் பாடசாலைமாணவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சனாவிலிருந்து 160 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இப் நகரில் உள்ள ஹெளத்தி போராளிகளின் தளங்களை இலக்கு வைத்து 5 குண்டுகள் வீசப்பட்டதாக சவுதிஅரேபிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட முகாமின் தளபதி காயமடைந்துள்ளதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
எனினும் ஹெளத்தி இராணுவத்தின் வெப்தளமும், தொலைக்காட்சியும் இந்த தாக்குதலின் போது அருகிலுள்ள பாடசாவையை சேர்ந்த இரு மாணவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.
இது இவ்வாறிருக்க யேமனில் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றலாமென ஐ.நா எச்சரித்துள்ளது,
யேமனின் உள்நாட்டு போர் அந்த நாட்டின் குடிநீர் விநியோகத்தினை பாதித்துள்ளது,மருத்துவமனைகளும் நெருக்கடியான நிலையிலுள்ளன, என யுனிசெவ் அமைப்பின் யேமனிற்கான பிரதிநிதி யூலியன் ஹார்னெய்ஸ் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக சிறுவர்களின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் கொல்லப்படுகின்றனர், அங்கவீனர்களாக்கப்படுகின்றனர்,அவர்களது கல்வியும், சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.