செய்திகள்

சவூதியில் இனிமேல் நாஸ்திகவாதிகள் பயங்கரவாதிகள்

சகல நாஸ்திகவாதிகளும் பயங்கரவாதிகள் என்று சவூதி அரேபிய அரசாங்கம் புதிய சட்டம் இயற்றியிருக்கிறது.

எந்த வடிவிலுமான நாஸ்திக சிந்தனையை தூண்டும் வகையிலுமான அல்லது சவூதி அரேபியா தாங்கப்படும் இஸ்லாமிய அடிப்படைகளை கேள்வி கேட்கும் வகையிலுமான எந்த விடயமும் பயங்கரவாதமாக புதிய சட்ட திருத்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனது அரசியல் கிளர்ச்சியாளர்களை அடக்கும் ஒரு நடவடிக்கையே இது என மனித உரிமைகள் அமைப்புக்கள் சவூதி அரசை குற்றம் இருக்கின்றன.

குறிப்பாக சவூதியில் இருந்து சிரியா சென்று உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டுவிட்டு புதிய பயிற்சி மற்றும் புரட்சிகர சிந்தனைகளுடன் திரும்புபவர்ககளை குறிவைத்தே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.