செய்திகள்

சவூதி மன்னர் மறைவு

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாசத்தில் இருந்து வந்த அவர் இன்று சவூதி நேரப்படி அதிகாலை 1 மணிக்கு காலமானார். இதையடுத்து அடுத்த மன்னராக, இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜிஸ் (வயது 79 ) முடி சூட்டப்பட உள்ளார்.