செய்திகள்

சா/த பரீட்சையில் 6102 பேர் 9A , 8698 பேர் 9W : 189,428 பேர் உயர்தரத்திற்கு தகுதி

2015 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை  பெறுபேற்றின் பிரகாரம் 6,102 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன்  8,698 பேர் சகல பாடங்களிலும் சித்திபெற தவறியுள்ளனர்.
அத்தோடு பாடசாலை பரீட்சார்த்திகளாக பரீட்சைக்கு தோற்றிய 273,224 பேரில் 189,428 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை கணித பாடத்தில் 150,481 பேர் சித்தியடைந்துள்ள அதேவேளை 122,723 பேர் அந்த பாடத்தில் சித்தியடைந்த தவரியுள்ளனர். அத்தோடு ஆங்கில பாடத்தில் 123,742 பேரும் , விஞ்ஞானப் பாடத்தில் 185,594 பேரும் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்தில் தோற்றிய 63,101 பேரில் 11,965 பேரும் , சிங்கள மொழியும் இலக்கியமும் பாடத்தில் தோற்றிய 210,142 பேரில் 22,637 பேரும் சித்தியடைய தவறியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
n10