செய்திகள்

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை குளவிகள் தாக்கியதில் 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி (படங்கள்)

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை பிரதேசத்தில் உணவருந்திக் கொண்டிருந்த சிலர் மீது குளவித் தாக்கியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் 17.04.2015 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா வசந்த கால நிகழ்வுக்கு விஜயம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த குழு மீதே இவ்வாறு குளவிகள் தாக்கியுள்ளன.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளனா்.

இதில் நாய் ஒன்றும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC08233

DSC08238

DSC08239

DSC08249

DSC08252

DSC08259

DSC08262

DSC08265