செய்திகள்

சாமஸ்ரீ விருது பெறுவதற்கு யாழ்.மாவட்டத்தில் 20 பேர் தகுதி

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ விருது வழங்கும் விழா இன்று சனிக்கிழமை (18.04.2015) பிற்பகல் 01.30 மணிக்கு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த விழாவிலே கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் முதன்மை விருந்தினராகவும், சமுர்த்தி மற்றும் வீடமைப்புப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விசேட அதிதியாகவும், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.என்.மைமுனா அகமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சமய,சமூக,கலாசார ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும்,வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் சாமஸ்ரீ விருது பெறுவதற்கு இந்த வருடம் அகில இலங்கை முழுவதும் 200 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் யாழ்.மாவட்டத்தில் 20 பேர் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-