சாயிபாபா சமாதியடைந்த நன்னாளை முன்னிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள் (படங்கள்)
எதிர்வரும் 24 ஆம் திகதி பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த நன்னாளில் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீசத்திய சாயி ஆராதனா மஹோற்சவத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் முழுவதும் திருநெல்வேலி பகவான் சத்தியசாயி சேவா நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
01 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மாலை 05 மணி முதல் இரவு 07.30 மணி வரை நிலையத்தில் இடம்பெறும் ஸ்ரீருத்திர ஏகாதசனி சாதனையில் கலந்து கொள்ளுதல்.
வியாழன்,ஞாயிறு பஜனை முடிவில் 10 நிமிடம் சாயி சிந்தனை வழங்கல், நிலையத்தில் அதிகாலை 05.30 மணிக்குச் சுப்ரபாதம், வேதபாராயணம் என்பன இசைத்தல், ஏப்ரல் முதலாம் திகதி முதல் தினமும் பிடியரிசி சேமித்து 23 ஆம் திகதி நிலையத்தில் சமர்ப்பித்தல், தினமும் சமைக்கும் போது ஓம் சாயிராம் சொல்லியவாறு சமர்ப்பித்தல், வறியவர்கள், புதியவர்களை இனங் கண்டு 24 ஆம் திகதி நிலையத்திற்கு அழைத்துச் சாயி செய்தி, அன்புப் பொதி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தினம் தோறும் இடம்பெறுகின்றன.
யாழ்.நகர் நிருபர்-