செய்திகள்

சார்லி ஹெப்டோ தாக்குதலின் சூத்திரதாரிகள் இரு சகோதரர்கள் என குற்றச்சாட்டு

பிரான்ஸ் பொலிஸார் சார்லி ஹெப்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளான இரு சகோதரர்களை கைது செய்வதற்காக பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அதேவேளை அவர்களுடன் தொடர்புள்ள பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாரிசிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இதுவரை ஏழுபேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை செரீவ் மற்றும் சையட் கௌச்சி என்ற இருவரை கைதுசெய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் செரீவ் ஈராக்கிற்கு போராளிகளை அனுப்பிய குற்றச்சாட்டிற்காக மூன்று வருட காலம் சிறையிலிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது, இவர்களின் இன்னொரு சகோதரர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.