செய்திகள்

சாவகச்சேரியில் இளைஞனின் சடலம் மீட்பு!

சாவகச்சேரி மகள்ர் கல்லூரிக்கு அருகில் வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து இறந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளர்.

நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்ட இந்த சடலம் அதே இடத்தைச் சேர்ந்த சிவராசா தவக்குமார் (35) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வயறிங் வேலை செய்துவரும் இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். எனினும் நேற்றக்காலை வரை அவர் வீட்டக்குத் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு அருகில் வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்த நிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட சிலர் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு சாவகக்சேரி மருத்துவமனையில் பிரேத பரிசோனைக்காக ஒப்படைத்துள்ளனர்.