செய்திகள்

சாவக்கச்சேரியில் வீடொன்றிலிருந்து கிளைமோர்களும் , வெடி மருந்துகளும் மீட்பு

யாழ்பாணம் சாவக்கச்சேரி பகுதியில் வீடொன்றிலிருந்து 3 கிளைமோர் குண்டுகளும் வெடி மருந்துகள் அடங்கிய பைகளும் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல் அங்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அந்த தேடுதல் நடவடிக்கையின் போது அந்த வீட்டிலிருந்த ஆணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10