செய்திகள்

சிகிரியா ஓவியத்தால் சிறைப்பட்டிருக்கும் பெண்ணுக்காய் மட்டக்களப்பில் பாரிய பேரணி

சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதி சிறைவாசம் அனுபவிக்கும் பெண்ணுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிகை விடுத்ததுடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் இன்று காலை பெண்களின் பாரிய பேரணியொன்று நடைபெற்றது.

மேன்மைப்படுத்தும் இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் சென்றோர் பல வாசகங்கள் அடங்கிய கோசங்களை எழுப்பினர்.

புதிய அரசே ஏழைப்பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட திட்டம் செய், அவலமுறும் எம் பெண் சமூகத்திற்கு விடிவு எப்போது, பெண்கள் சுய தொழிலை மேற்கொள்ள உதவிக் கரம் நீட்டுங்கள் என எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கிச் சென்றனர்.

பின்னர் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டனர்.

Batticaloa (5)

Batticaloa (4)

Batticaloa (3)

Batticaloa (1)