செய்திகள்

சிங்கப்பூருக்கு பல தடவை பயணம் செய்தவர் மைத்திரி, சதித் திட்டங்கள் தற்போது அம்பலம்: தினேஷ்

சிங்கப்பூருக்கும் ஜெனீவாவுக்கும் கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேனவே அதிக தடவை சென்று வந்தவர் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் பைஷர் முஸ்தபா அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ;

கடந்த காலங்களில் எதிரணியில் உள்ள எல்லோரும் சிங்கப்பூருக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களில் அதிகமாக அங்கு சென்ற ஒரே நபர் மைத்திரிபால சிறிசேனவேயாகும். ஜெனீவாவுக்கும் அதிகமாக சென்று வந்தவரும் அவரே.

எதற்காக அங்கு சென்றனர் என்பது எமக்குத் தெரியும். அங்கு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பது தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. பைஷர் முஸ்தபாவும் சிங்கப்பூருக்குச் சென்று வந்தவர்தான். அவர் திறமைமிக்க அரசியல்வாதியே அல்ல என்றார்.