செய்திகள்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தது எப்படி? நிமல் கேள்வி

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்கியமை ஒழுங்கு முறையற்றதாகும். இவருடைய நியமனம் இலங்கையின் நற்பெய ருக்கு ஏற்பட்ட களங்கமாகுமென எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத் தினால் நிதி மோசடிகள் இடம்பெற்றதாக கூறி தேர்தல் பிரசாரம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று அதே செயற்பாடு களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட முறியினால் அரசாங்கத்துக்கு 9 பில்லியன் நட்டம் ஏற்படும் வகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி த்தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அறிக்கையில்,

இலங்கையின் நிதித்துறையில் மக்கள் அபிமானம் பெற்ற மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியினருமே நியமித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கொண்டிருந்த தனிப்பட்ட அரசியல் தொடர்பு காரணமாகவே அவரை இந்தப் பதவியில் அமர்த்தினர்.

மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன் தனது மருமகனுக்கு இலாபம் ஏற்படும் வகை யில் திறைசேரி முறியை வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டினால் வட்டி வீதம் 9.5 வீதத்தில் இருந்து 12.5 வீதமாக உயர்வடைய உள்ளது.