செய்திகள்

சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவுக்காக சண்டிலிப்பாயில் காணி சுவீகரிப்பு: உரிமையாளருக்கு அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான ஐந்து காணித்துண்டுகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடைபெறும் நிலையில் இது தொடர்பில் உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உரிமையாளர்கள் ஐவருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

05.01.2015 என திகதியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமன்ட் ‘பி’ அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக குறித்த காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு உரிமையாளர்கள் சமுகமளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.