செய்திகள்

சிதைவடைந்து செல்லும் இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பு

அறிவியல் வளர்ச்சி அதிகரிக்கின்றது: பொருள்வளம் பெருகுகின்றது, ஆனால் மனிதர்களை பெரும் சுமை வருத்துகின்றது. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர். நடுத்தரத்தினர் பேராசையில் சிக்கி அமைதியை இழக்கின்றனர். பணம், அதிகாரம் போன்ற வசதி படைத்தோர் பகிரும் மனமின்றி தம்மை தனிமை படுத்திக்கொள்கின்றனர்.
கடந்த 10 வருடங்களாக எமது நாடு வெளிப் பார்வைக்கு முக்கியமற்ற அபிவிருத்தி திட்டங்கள் மூலமாக மேலோட்டமாக ஒரு பொழிவைக் கொடுத்தாலும் சாதாரண மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளார்கள். பொருட்கள் இருந்தும் நுகர்வேர் அப்பொருட்களை வாங்கும் சக்தியற்றவர்களாக மூன்று வேலைகளிலும் சத்தான உணவுகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். அதே போல் கல்வி சுகாதாரத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மறைமுக வரியே காரணமாகும். அதுமட்டுமன்றி மக்கள் நல்லாட்சி, சுதந்திரம் இல்லாத காரணத்தினால்; பயத்துடனேயே வாழ்கின்றனர்.

நாடு
எமது நட்டில் இருக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல், சமய, கலாசார அமைப்பு முறை மக்களின் மனித விழுமியங்களுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்த அமைப்பு முறை மாற்றப்பட்டால்தான் மனிதர் மாண்போடு வாழ முடியும்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும். தனிநபர் எதேட்சதிகாரம் குடும்பஆட்சி என்பவற்றிக்கு நாட்டை ஒப்படைக்க முடியாது. செயற்பாடுகளில் வெளிப்படை இருக்க வேண்டும். உண்மையை தெரிந்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்படக்கூடாது.
அதிகார வர்க்கத்தின் லஞ்சம், ஊழல்மோசடி போன்ற நடவடிக்கைகளினால் பொது மக்களின் பணம் விரயமாக்கப்படுகின்றது. 17ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது ஓரளவு நிவாரணமாக அமையலாம்.

காணி
80 வீதமான காணி அரசாங்கத்திடமே உள்ளது. ஆகவே காணி ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். காணி வழங்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.
காணியும் தொழிலாளரும் ஒரு சொத்து. அதனால் அவை இரண்டையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.
இன்று 30 வீதமான தொழிலாளர் மாத்திரமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 வீதத்தை இவர்கள் ஈட்டித் தருகின்றனர். எனவே விவசாயத்திற்கு முதன்மையான இடத்தைக் கொடுக்க வேண்டும். கிராமங்களில், தோட்டங்களில் உள்ள காணிகள் முழுமையாக,திறமையாகப பயன்படுத்த வேண்டும்.

நல்லாட்சி
சகல மக்களும் சமத்துவமாக முழு உரிமையோடு வாழக்கூடிய நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும்.
சகல சமயத்தவரும் தங்கள் சமய கடமைகளை நிறைவேற்றக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.
வெளிப்படையான ஊழலற்ற அரசாங்க நிருவாகம் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும்.
சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்nடியழுப்பி ஊழலற்ற அரசு முகாமைத்துவத்தை உருவாக்குவதற்கு பரிசுத்தமான தலைமைத்துவம் தேவை.
அமைப்புகளும் நிருவனங்களும் மக்களுக்கு சேவைசெய்வதாக இருக்க வேண்டுமேயன்றி மாறாக இருக்கக்கூடாது.
அசமத்துவம், பாகுபாடு, பிரிவினை, வறுமை என்பனவற்றை உருவாக்கும் அநீதியான சுரண்டல் அமைப்பு முறையை உடைத்தெறிய வேண்டும்.

பொருளாதாரம்
உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட சந்தை பொருளாதார முறை உருவாக்கப்படவேண்டும். இன்று எமது நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் கையில்தான் தங்கியுள்ளது. வருடமொன்றுக்கு 7 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை இலங்கை வருமானமாகப் பெருகின்றது (மொத்த தேசிய உற்பத்தியில் 10வீதம்). 20 முதல் 35 வயதிற்குட்பட்ட 18 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். இதனால் 60 வயதிற்கு மேற்பட்ட 28 இலட்சம் முதியோர்களும் (2011ம் ஆண்டு), பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 வீதமான துடிப்பான தொழிலாளர்களின் தொழிற் திறனை நாடு இழந்துள்ளது. ஒரு சிலருக்கு மாத்திரமே சலுகையளிக்கும் பொருளாதாரத்தை வேலைசெய்கின்ற பெருவாரியான மக்களுக்கு பயன்னடும் விதமாக மாற்றியமைக்க திவிரமான விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.
பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வீட்டு பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால்; அதனை வளர்க்கக்கூடிய வழிவகைகளை செய்யவேண்டுமே அனிறி வெளிச் சந்தைக்கு ஆதரவளிக்ககூடாது
2005ஆம் ஆண்டு புள்ளி விபர அறிக்கைகள்படி 4 நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 25344 தேவைப்பட்டது. ஜுன் மாதம் 2014ஆம் ஆண்டு அறிக்கையின்படி மாதம் ஒன்றுக்கு 50791 ரூபா தேவைப்படுவதாக கனிக்கப்பட்டுள்ளது. ஆனால் 80வீதமான மக்களுக்கு இது கிடைப்பதில்லை.

வரி
டேவிட் ரிக்காடோ வரி செலுத்தும் முறையை உருவாக்கினார். அதாவது பணம் படைத்தவர்களிற்கும் ஏழைகளிற்கும் இடையிலான சமத்துவத்தைப் பேணுவதற்காக ஆகும். ஆனால் இலங்கையில் ஏழை மக்களே அதிகம் வரியை செலுத்துகின்றனர். 1 லீற்றர் பெற்றோலுக்க ரூ.52, 1லீற்றர் டீசலுக்கு ரூ.17, 1கிலோ பால்மாவிற்கு ரூ.135. மறைமுக வரி மூலமாக ஒரு கிலோ சீனிக்கு ரூபா 32.50 செலுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு கோடி கிலோ சீனி விற்கப்படுகிறது. 2006 – 2012 குடும்ப வருமானம் 3 வீதத்தினால் கூடியுள்ளது, ஆனால் குடும்ப செலவீனம் 7 வீதமாக அதகரித்துள்ளது. இன்று 40 வீதமான மக்கள் நாள் வருமானமாக ரூ.200 ற்கும் குறைவாகவே பெறுகின்றனர்.
ஏற்றுமதியைக் கூட்டி இறக்குமதியை குறைக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு (குறிப்பாக உணவுப் பொருட்களுக்கு) மறைமுக வரியும் நேர்;முக வரியும் குறைக்கப்பட வேண்டும்.
ஆண்டு நேர்முக வரி மறைமுக வரி
2004 4100 கோடி ரூபா 24000 கோடி ரூபா
2013 23000 கோடி ,, 166000 கோடி ,,
அரசாங்கத்தின் வருமானம 90 – 92 வீதம்; வரி மூலமாகும். இதில் 80 வீதமானவை மறைமுக வரியாகும். இது மக்களிடமிந்து அறவிடப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின்படி செலவுகள் ரூ.3200 பில்லியன். அதில் வருடாந்த வருமானம் ரூ.1500 பில்லியன். அதாவது செலவு 1;;;;;;:2 வீதம். அதே நேரத்தில் வெளிநாட்டு உள்நாட்டு கடன் ரூ.1800 பில்லியன். வருடாந்தம் திருப்பிச் வெலுத்த வேண்டிய கடன் ரூ.1265 பிலிலியன். வெளிநாட்டுக் கடன் 2014 மே மாதம் 42.4 பி.அமெ.டொ. முழு வருமானமும் கடனை அடைக்கும் செயற்பாட்டுக்கே பயன்படுகிறது. அதனால் ஒரு தனி நபர் மீது இன்று 449000 ரூபா கடன் சுமை ஏறியுள்ளது
அபிவிருத்தியும் ஊழலும்
சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினம் 09.12.2005 தொடக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.இது சர்வதேச மட்டத்தில் ஊழலுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட தினம். அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் இடம்பெறும் ஊழல்களே பாரிய ஊழல்களாக கருதப்படுகின்றன.இவை அரசியல், சட்டம் மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் எமது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.நூறு வீதம் அபிவிருத்தி வேண்டும் என்றால் ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்;. பணத்தைக் கொடுத்து மக்களிடம் வாக்குகளை வாங்குவதும் ஊழலே. ஊழல் இடம்பெரும் பொழுது அங்கு நேர்மை, உண்மை எல்லாம் அகன்று முழு நாடும் பாதிப்பிற்கு உள்ளாகும்.இதனால் வறுமை கோட்டிற்கு உட்பட்ட மக்களின் பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்படைகின்றது. (டீசநயம வாந உழசசரிவழைn உhயin).
ஒவ்வொரு நாட்டிலும் வருடாவருடம் அபிவிருத்தி நடந்துக்கொண்டிருக்கிறது. அதே போல் இலங்கையிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அநேகமான திட்டங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணம் படைத்தோருக்குமே பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டங்கள் மூலமாக தங்களது பைகளில் கோடிக்கணக்கான பணத்தை பகிர்ந்துக் கொண்டனர். இந்த ஊழல்கழுக்கு அவசியமற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் மக்களிடமிருந்து நேர்முக,மறைமுக வரி மூலாக கடனை செலுத்துவதால் இந்த மக்களின் வாழ்க்கைச் செலவு புள்ளியெண் மலைப்போல் உயர்ந்து செல்கின்றது.
உதாரணமாக வவுனியாவிலிருந்து தலைமன்னாருக்கு போடப்பட்ட தண்டைவாலம் 106 கிலோ மீட்டர். இதில் 1 கிலோ மீட்டருக்கு 0.5 மில்லியன் அமெ. டொலராகம் ஆனால் காட்டப்பட்ட செலவு 1 கிலோ மீட்டருக்கு 2.18 மில்லியன் அமெ.டொலராகும். அதாவது 436 சதவீதம் கூட்டி காட்டப்பட்டுள்ளது. அதனுடைய முழு செலவுத்தொகை 23.1 கோடி ஆகும். இதையும்விட மோசமானது மாத்தறைக்கும் பெளியத்தைக்கும் இடையிலான 28கிமீ நீளமான பாதை. இதற்கு அ.மெ டொலர் 292 மில்லியன் ஆகும். அதாவது 1 கி.மீ க்கு அ.மெ டொலர் 10.43 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அதாவது 2086 சதவீதம் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற அநேகமான அபிவிருத்தி திட்டங்கள் மக்களை கடனாளிகளாய் மாற்றியுள்ளன.
கட்டுநாயக்கா அதிவேக பாதை 505 வீதம் கூடுதலாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக பாதை 2062 வீதமும், மாத்தறை – பெலியத்த ரயில் பாதை 2086 வீதமும் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற 20 அபிவிருத்தி திட்டங்களுக்;கு ரூ.600 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. இன்னும் செலவழிக்க தயாராக உள்ளன.அம்பாந்தோட்டை (மத்தன இராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்) இவ்விமான நிலையத்தில் ஒரு நாளைக்கான வருமானம் ரூ. 16000 ஆகும். இது இவ்விமான நிலையத்தின் தண்ணீருக்கான செலவைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து மத்தன விமான நிலையம் வரையும் உள்ள 32 கி.மீ அதிவேக பாதைக்கு 53 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 கி.மீ க்கு ரூ.1.6 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பாதை அனேகமானோரால் பயன்படுத்தப்படுவதில்லை.
அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள்மயப்படுத்தப்பட்டு மக்களது தேவைகளை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட வேண்டும். உதாரணமாக இன்று பாரிய சாலை நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதற்கு கரணம் சாலை வழியாகவே பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்வதேயாகும். இதனை புகைவண்டிகள் மூலம் எடுத்துச்செல்வதற்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இலங்கையில் 5 வீதமான பொருட்கள்கூட இரயிலில் அனுப்பப்படுவதில்லை.
பொதுத்துறையினர்
2005ஆம் ஆண்டு 644 000 ஆக இருந்து 2014 பதிநான்கு இலட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் 17 பேருக்கு ஒருவர் என்ற வகையில் பொதுத் துறையினரின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான சம்பளம் மொத்த தேசிய உற்பத்தியில் 24வீதம் (ரூ.411 பில்லியன்). ஆனால் 25 சத வீதமாக உள்ள சிறுபான்மை இனத்தவரில் 5 சத வீதமானவர்கள்கூட பொதுத்துறையில் இணைக்கப்படவில்லை. இதனால் மொழி உரிமை அமுலாக்கத்தில பின்னடைவே ஏற்பட்டுள்ளது. பொதுத்துறையினரின் தொகை 15 இலட்சமாக அதிகரிக்கப் போவதாக ஜனாதிபதி கூறியுள்ளது மக்களின் வரிச்சுமையை அதிகரிப்பதாகவேயிருக்கும். தனியார் துறையிலும் சுயவேலைத் திட்டங்களிலும் வேலை வாய்பிபினை அதிகரித்தால் இந்த நிலை ஏற்படாது. கடந்த 10 வருடங்களாக தொழிலற்ற வளர்ச்சியே (பசழறவா றiவாழரவ தழடிள) காட்டப்படுகிறது. புதிய தொழிற் துறைகள் ஏற்படுத்தப்படவில்லை.
ஓய்வூதியம் பொது மக்களின் பணத்திலேயே கொடுக்கப்படுவதால் மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் துணைபுரியாது. 2013ஆம் ஆண்டில் 521,700 ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்காக 136 பில்லியன் செலவாகியுள்ளது. இது வருடா வருடம் அதிகரிக்குமே அன்றி குறையப்போவதில்லை.
மொத்த தேசிய வருமானத்தில் 24 வீதமானது பொது துறையினருடைய சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரச கடன் வட்டிச் செலவீனத்திற்காக 25 வீதமும், கடன் மீள் செலுத்துகைக்காக 13.4 வீதமும் (1163 பில்லியன் ரூபாய்),; மற்றும் மாணியத்திற்கு 15 வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று சுமார் 68 பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில 2013ம் ஆண்டு; ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் 30 பில்லியன் ரூபாய், மத்தன விமான நலையம் 2250 மில்லியன் ரூபாய் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூ.421 பில்லியன் நட்டம் அடைந்துள்ளன. 2014ம் ஆண்டு இந் நிறுவனங்கள் மூலம் 1426 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பெறப்பட்ட வருமானம் 1100 பில்லியன்களாகும். அதாவது 24 வீதம் நட்டமாகும்.

கல்வி
இன்று கல்வி முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்ட நிலையிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். கல்விக்காக 2006ம் ஆண்டு 2.6 சதவீதம் ஒதுக்கப்பட்டது இது 2012ல் 1.76 ஆக குறைவடைந்தது. 2013ல் 1.49 ஆகவும் 2014ல் 1.31 ஆகவும் குறைக்கப்பட்டது. இந்நிலை காணப்படின் எப்படி கல்வியில் வளர்ச்சி அடைய முடியும். 2015ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூபா 47.6 பில்லியன் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 1.5 சதவீதமாகும். ஆனால் யுத்தம் முடிந்து 5 வருட காலமாகியும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிக்காக 342.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எமது நாட்டில் இன்று இலவச கல்வி நிலை என்ற நிலை அற்று போயுள்ளது. இவ் வரவு செலவு திட்டத்தில் மொத்த செலவீனத்தை 35600 கோடி ரூபாவாக அதிகரிக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் கல்விக்காக போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவு திட்டத்தில் எதிர்வரும் 5 வருடங்களில் 100000 பேர் சர்வகலாசாலைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டாலும் அதற்கு போதியளவான பணம் ஒதுக்ககப்படவில்லை.

சுகாதாரம்
சனத்தொகை வளர்சிக்கு ஏற்ப வருடாந்த வரவு செலவு அறிக்கையில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி (மொத்த தேசிய உற்பத்தியில் 1.7வீதம்). போதுமான பணம் ஒதுக்கப்படப்படவில்லை. இதைவிட மேசமான ஒன்று 2005ஆம் ஆண்டு மந்திரிசபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய வைத்திய மருந்துக் கொள்கை இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.இதனை அமுல்படுத்தினால் இன்று 75 சதவீதமான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று மருந்துகளை இறக்குமதி செய்யும் 400 கம்பெனிகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாவை கொடுக்கின்றன. இதனால் 10000 கோடி ரூபா உயர் மட்டத்தில் கொல்லையடிக்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு இலட்சம் பிறப்பிற்கு 134 தாய்மார் மரணிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வறுமையும் மறைமுக பட்டினியுமே. சுகாதார வசதிகள் நாட்டில் இருந்தாலும் அவற்றை உயர் மட்ட மக்களால் மாத்திரமே அனுபவிக்கக்கூடியதாக உள்ளது.

பெருந்தோட்டத்துறை சமூகம்
2013ம் ஆண்டு கிடைத்த வெளிநாட்டு ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையில் தேயிலை ரூ.190.8 பில்லியன், இறப்பர் ரூ.124 பில்லியன் ஆகும். எனவே ஏற்றுமதி வருமானத்தில் 23 சதவீத பங்கை பெருந்தோட்டத்துறை கொண்டுள்ளது.
2000ம் ஆண்டு எமது ஏற்றுமதி மொத்த தேசிய உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டிற்கு 16 சதவீதமாக குறைந்துள்ளது. இன்றைய அரசின் முக்கிய வருமானம் வரியாகும். இது இந்த மக்களை இன்னும் வருமை நிலைக்கு தள்ளும். இன்றை வரைக்கும் இம் மக்கள் வறுமை கோட்டின் கீழ் உரிய வருமானம் இன்றியும் காணி, வீடு, மொழி உரிமைகள் இன்றியும், தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படாமலும் உள்ளனர். அதனால் இவர்களது மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடு
2013ம் ஆண்டு எதிர்ப்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு அமெ டொலர் 2 பில்லியன் ஆகும். ஆனால் கிடைத்துது அமெ டொலர் 916 மில்லியன்களாகும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிகவும் குறைவானதாகும். உதாரணமாக வியட்னாம் 2013 ஆண்டிற்கான வெளிநாடடு நேரடி முதலீடு 12 பில்லியன் அமெ டொலராகும். இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடிமட்டத்தில் உள்ள 20 சதவீதமான மக்கள் 4 வீத வருமானத்தையே பெறுகின்றன. 20 சதவீதமான பணக்கார வர்க்கத்தினர் 55 வீத வருமானத்தை பெருகின்றனர். 2013ம் ஆண்டு விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட 111 பில்லியன் ரூபாவில் 67 பில்லியன் ரூபாய்;தான் செலவழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 30 சதவீதமான மக்கள் விவசாயத்திலேயே ஈடுபடுகின்றனர். ஆனால் பாதுகாப்பு செலவீனம் வருடாவருடம் கூடிக்கொண்டே செல்கின்றது. 2013ம் ஆண்டு 190 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 170 பில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. 2014 வரவு செலவு திட்டத்தில் 80 வீதமான திட்டங்கள் முடிவடையவில்லை. 2015 வரவு செலவு திட்டத்தில் 77 புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைப்படுத்தப்படுமா? இதற்கான பணத்தை எவ் வழியில் பெற முடியும் என்பது போன்ற பாரிய கேளிவிகள் எழுகின்றன.

சீன ஆதிக்கம்
இன்று எமது நாடு அணிசேரா கொள்கையிலிருந்து விலகி படிப்படியாக சீன நாட்டடிற்கு அடிமையாகின்ற நிலையே காணப்படுகின்றது. 1971-2012 வரை சீனாவிடம் பெற்றக்கடன் 505 600 கோடி அமெரிக்க டொலர். இந்தக் கடனில் 98 வீதம் வர்த்தக வட்டி அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதில் 2005-2012 வரை 94 வீதம் பெறப்பட்டுள்ளது. (476100 கோடி அமெ.டொலர்), தொழில்நுட்பமும் தொழிலாளரும் (1 லட்சம் பேர்) சீனாவினுடையது. இவர்களுக்கான வீடுகள் இங்கே கட்டப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்பிலோ தொழில் நுட்ப வளர்ச்சியிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளது. காணிகள் சொந்தமாக கொடுக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறையாண்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றுக் கூறி இறையாண்மையை விற்றுவிட்டார்கள். இது சர்வதேச மட்டத்திலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 2012 முதல் 2014 வரையான காலத்தில் சீனா வழங்க உறுதியளித்துள்ள உதவித்தொகை 218 கோடி அமெரிக்க டொலராகும்.
இன்று சீனா ஏசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற ஒன்றை உருவாக்கி கடன் கொடுக்கின்றது. இதில் வங்கி முகாமைத்துவத்திற்கும் வேறாக பணம் ஒதுக்க வேண்டும். இன்று இலங்கையில் சீன முதலீடு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனுடைய பணம், தொழில்;நுட்பம், தொழிராளர்கள் என்பவற்றின் மூலம் எமது நாட்டில் பாரிய பொருளாதார சிக்கல்கள் ஏற்படலாம். 2014ம் ஆண்டு சீனா தன்னுடைய பாதுகாப்பு செலவை 12 சதவீதமாக உயர்த்தியது. அதாவது அ.மெ டொலர் 131 பில்லியன். இது இன்றைய பிராந்திய சக்தியாகவும், கடல்சார் ரீதியாக தனது அதிகாரத்தை பலப்படுத்துவதற்கும் பட்டுப்பாதையை பலப்படுத்துவதனால் பல நாடுகளின் துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதனால் இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையம் போன்றவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. இதனால் எமது அயல் நாடான இந்தியாவுடன் உள்ள உறவு படிப்படியாக பாதிப்படையும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் இறங்குதுறையை பொறுத்தவரையில் அதன் முதற்கட்ட பணிக்கு, செலவீனத்தில் 85 வீதத்தை – 30 கோடியே 70 லட்சம் அமெரிக்க டொலரை – சீனா வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான செலவீனமாக 81 கோடி அமெரிக்க டொலர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஸி ஜின் பிங்கின் 2014 செப்டம்பர் வருகையின் போது இது விடயத்தில் விநியோக மாற்றீடு ஒப்பந்தம் நெய்யப்பட்டுள்ளது. அது 35 வருடங்கள் செல்லுபடியாகும். ஆதன்படி அங்குள்ள கொள்கலன்களுக்கான ஏழு தளங்களில் நான்கு சீனக் கம்பனிகளின் தனித்துவத்திற்கென ஒப்படைக்கப்படவுள்ளன.
அடுத்து கொழும்பு நகரத்திட்டம். இது மிகப் பாரிய திட்டம். இதன் பெறுபேறாக 140 கோடி அமெரிக்க டொலர் செலவில் கடலில் இருந்து 233 ஹெக்டயர் நிலம் சுவீகரிக்கப்படும். அது 2014 செப்டம்பர் 17ம் திகதி அதிபர் ஸி ஜிங் பிங் இன் கொழும்பில் நின்ற சமயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 125 ஹெக்டயர் இலங்கைக்குரியதாக இருக்கும். 88 ஹெக்டயர் 99 வருடங்களிற்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். திறந்த பிடிமானம் அற்ற அடிப்படையில் 20 ஹெக்டயர் சீனாவுக்கு ஒப்படைக்கப்படும். அதன் அர்த்தம் பெரும்பாலும் அரைவாசிப் பங்கு அல்லது அரைவாசிக்குச் சற்றுக் குறைவான பங்கு சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு காலக்கட்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை செல்லக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தென்படுகிறது.
இன்று எமது நாடு சர்வாதிகார போக்குடையதாகவும் இராணுவமயப்படுத்தப்பட்டு ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மக்கள் விழிப்புணர்ச்சிப் பெற்று நல்லாட்சி,சுதந்திரம்.வறுமை ஓழுpப்பு ஆகியவற்றுக்கு வழிகோளக்கூடிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய கடமையை உணர்ந்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் இருப்பதை புரிந்துகொண்டு செயற்படவேண்டும்.