செய்திகள்

சித்தார்த் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கிராமிய கலைஞர்களை போல சினிமா நடிகர்களுக்கும் சேவை வரி விலக்கு வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் சித்தார்த் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கிராமிய கலைஞர்கள் பெறும் சம்பளத்தை, நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு பெறுவார்களா? – தலைமை நீதிபதி அமர்வு

யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது அரசின் அதிகாரம். லாப நோக்கமின்றி சேவை செய்யும் பாரம்பரிய கலைஞர்களை பாதுகாக்கவே மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

கிராமிய கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள் ஒன்றல்ல, நடிகர்களுக்கு அதிக ஊதியம், கிராமிய கலைஞர்களின் வரிச்சலுகையை திரைப்பட நடிகர்கள் கோர முடியாது என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.