செய்திகள்

சித்திரவதை செய்து தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக நெம்சோவ் கொலை சந்தேகநபர் தெரிவிப்பு

ரஷ்சியாவின் முன்னாள் பிரதிபிரதமர் பொறிஸ் நெம்சோவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஓருவர் தான் சித்திரவதை காரணமாகவே அவ்வாறு வாக்கு மூலம் அளித்ததாக ரஷ்சிய மனித உரிமை கவுன்சிலின் உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
ஜவுர் டாடாயெவ் என்ற சந்தேகநபரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட சந்தேக நபரின் உடலில் காயங்களை தான் பார்த்ததாகவும் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.தன்னுடன் கைதுசெய்யப்பட்ட நண்பர் ஓருவரை விடுவிப்பதற்காகவே தான் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிட்டார் என மனிதஉரிமை கவுன்சில் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சந்தேகநபர் அழுத்தங்கள் காரணமாகவே அவ்வாறு வாக்குமூலம் அளித்தார் என கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என மனித உரிமை; கவுன்சில் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.அவரது கையில் விலங்கிடப்பட்டதற்கான அடையாளங்களும்,காலில் அடையாளங்களும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் அளித்தமைக்கான காரணத்தினை தெரிவிக்க முயன்றதாகவும் எனினும் தனக்கு வாய்ப்பளிக்ககப்படவில்லை என்றும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் கைதுசெய்யப்பட்ட இன்னொரு நபரும் தான் அப்பாவி என தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.
இதேவேளை மனித உரிமை பணியாளர்களை விசாரணைகளில் தலையிடவேண்டாம் என ரஷ்சிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.நெம்சோவின் கொலைக்கு என்ன காரணம் என பொலிஸார் இதுவரை குறிப்பிடாத நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதி பிரதமர் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முக்கிய சந்தேகநபர்கள் இருவரும் செச்னியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.