செய்திகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 500 பேரூந்துகள் மேலதிக சேவையில்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக சுமார் 500 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போதுமான அளவு பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தி மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை அடுத்து வரும் நாட்களிலும் பேரூந்துகளை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டா​ர்.

புத்தாண்டு விசேட பேரூந்து சேவைகள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அதனைத் தவிர 011 1333 222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் எனவும் போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பி ஹேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

N5