செய்திகள்

சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளோயே மட்டுப்படுத்த கோரிக்கை

தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுட்டானங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை காணப்படுவதால் நாடு பூராகவும் புத்தாண்டு காலத்திலும் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு சம்பிரதாய அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளே குடும்பத்தினருடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாமெனவும் அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாமெனவும் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. -(3)