செய்திகள்

சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள்

தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)