செய்திகள்

சிந்திக்கவைக்கும் சைவசித்தாந்தம் – பாகம்-1

இவ்வாக்கம் பிறந்த கதை


சத்தியம் சாகாது தலைப்பெடுத்து கவிதைத்தொகுப்புத் தந்த இலண்டன் புலவரேறு, அண்ணன், நல்லதம்பி சிவநாதன் இல்லத்தில் தமிழவைக் கூட்டம். பெருங்கலைஞன் என்று என் உள்ளம் கொண்டாடுபவர்களில் ஒருவரான சாம் பிரதீபனும் வந்திருந்தார். அவர் கூட்ட முடிவில் நீங்கள் படிப்பிக்கும் சைவசித்தாந்தம் குறித்து நாங்கள் இளம் ஊடகவியலாளர் சிலர் இணைந்து தொடங்கும் கணினிவலைக்கு எழுதித்தரமுடியுமா? ஏன்று கேட்டார். அந்த ஊக்கத்தில் பிறக்கிறது இந்த ஆக்கம். 65ம் ஆண்டு முதல் எழுத்துத்துறையிலும் அதன் பரிணாமமாக ஊடகத்துறை, ஆய்வுத்துறை, ஆசிரியத்துறை என்பவற்றிலும் உள்ள நான் அவருடன் பேசியதோ ஒரு சில நிமிடங்கள்தான். நான் பார்த்ததும் கேட்டதும் அவரின் ஒருசில நிகழ்ச்சிகளைத்தான் அவற்றைக் கொண்டே என்னுள் தன்னை ஒரு தலைசிறந்த கவிஞனாகப் பொறுப்புள்ள ஊடகவியலாளனாக மானிடம் போற்றும் நாடகக் கலைஞனாக தாயகம் தேசியம் தன்னாட்சிப் பயணத்தில் விளைந்த மற்றொரு கலைமுத்தாக மாற்றினார் என்றால் அதுதான் அவரின் கலைத்துவம். என்னுள் மட்டுமல்ல தமிழ்கூறு நல்லுலகின் பல்லாயிரக்கணக்கான இதயங்களில் கலைச்சிம்மாசனம் கொண்டமர்ந்திருக்கும் பெருங்கலைஞர் சாம்பிரதீபன். இதனால்தான் எத்தனையோ பேர் கேட்டும் கணினிவலைகளில் எழுதுவதில்லை என்ற பிடிவாதத்தை ஒரு உண்மைக் கலைஞனின் அழைப்புக்கு முன் மறுக்க முடியாது இன்று “ சிந்திக்க வைக்கும் சைவசித்தாந்தம்” என்னும் கணினி வலைத் தொடரில் “சிவஞானபோதச் சூத்திரங்கள் முதல்நிலை அறிமுகம்” என்னும் சிந்தனையுடன் தமிழகத் – தமிழீழ உடன்பிறப்புக்களையும் பெரியோரையும் சந்திக்கின்றேன் அனைவருக்கும் அன்பு வணக்கம்.!
sam-10

சிந்திக்க வைக்கும் சைவசித்தாந்தமா அதுவென்ன?
புலம்பெயர்ந்த வாழ்வில் பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டோம். உழைத்துச் சேர்க்கவும்இ கற்று உயரவும்இதாயகத்தில் பெறாத பலவற்றைப் பெற்று மகிழவும் புலம்பெயர் வாழ்வு பெரிதாக உதவியுள்ளது மறுக்க முடியாத உண்மை. அதே வேளை சிங்கள பௌத்த பேரினவாதத்தாலும் அரசபயங்கரவாதத்தாலும் உறவுகளைஇ உற்றதைஇ உயிரை இழந்தோம்.
புதுப்புலத்திலாவது பெற்றவை கொண்டு பெருமைபடைத்திடலாம் என்ற ஆசையில் துடிக்கையில்இ புலத்துத் தமிழிளம் சந்ததி கலாச்சாரச் சட்டையைக் கழற்றிவிட்டு நவீனத்துவ வேகம் கொண்டெழுகிறது. பாவம் இளையவர்கள். கல்வியில் படித்த விஞ்ஞான பூர்வமான டார்வினின் கூர்ப்புக்கொள்கையா பரிணாம வளர்ச்சித் தத்துவமா வாசித்து அறிந்த நைரோபி கென்யாவில் பிறந்து ஒக்ஸ்வேர்ட் பலியல் கல்லூரியின் நுண்உயிரியல் பேராசிரியராகத் தன் எண்ணங்களைப் பதிவாக்கிய பெரும் பேராசிரியர் ரிச்சர்ட் டோக்கின்சின் “த கோட் டிலூசன் “ (கடவுள் ஒரு மாயத் தோற்றம்) சொல்லும் கடவுள் தவறான நம்பிக்கை என்னும் விளக்கங்களா அல்லது அப்பா அம்மா கும்பிட்டுப்பழக்கிய சாமியா? அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது வாசித்துக் கேட்ட நற்செய்தியா? எதனைத் தாம் நம்புவது என இளந்தமிழ்ப் புலம்பெயர் உள்ளங்கள் தடுமாறுகின்றன. இந்த வாழ்க்கைத் திணறுலுக்குக் காரணம் தமிழர் தம் சுயமான சிந்தனைகளில் இலக்கியங்களில் ஞானநூல்களில் கவனம் செலுத்தாதுஇ
சமஸ்கிருதவாக்கத்திலும் ஐரோப்பியவாக்கத்திலும் வாழ்வைத் தாமும் தேடித் தம் பிள்ளைகளையும் தேடவைப்பதேயாகும். . நான் யாரின் கீழ் தமிழ்ப்புனைகதைகளில் யதார்த்தவாதமும் படைப்பாக்கத்திறனும் ஆய்வைச் செய்தேனோ அந்த என்றும் என் மதிப்புக்கும் அன்புக்குமுரிய பேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள் தனது இறுதிக்காலங்களில் என்னுடன் தொலைபேசி வழியாக நீண்ட நேரம் பேசுகையில் எமது மண்ணின் நம்பிக்கைகளைஇ மரபின் தன்மைகைளப் பேணிய நிலையிலானஇ பொதுவுடமை முன்னெடுக்கப் படுதலை நான் தேசியப்பொதுவுடமை வாதம் என்பேன். அதனை நாங்கள் செய்யாமல் யேர்மனியில் பிறந்து பிரான்சில் பிரச்சினைகளைச் சந்தித்து இலண்டனில் தத்துவவடிவம் பெற்ற உலகின் தலைசிறந்த சிந்தனைகளில் ஒன்றான மார்க்சியத்தை அதே வடிவத்தில் எம் மண்ணில் வார்க்க முயற்சித்ததே அதன் பரவுதல் பின்னடைவுக்குக் காரணம். இனிமேலாவது இதனைச் செய்யுங்கள் என்பார். நான் மார்க்சியத்தை மூன்று பட்டப்படிப்புகளுக்கு மும்முறை வௌ;வேறு கோணங்களில் ஆய்வு செய்தவன் என்பதனை எனக்கு நினைவுபடுத்திய அவர் தமிழர்களின் இலக்கியத்தைச் சித்தாந்தத்தைக் காலத்துடன் பொருத்தி மீள்வாசிப்புச் செய்யுமாறு கூறுவார். அவர் தந்த அந்த சிந்தனையின் விளைவு தான் ‘சிந்திக்கவைக்கும் சைவசித்தாந்தம்’ என்னும் இத்தலைப்பு.
sam-11

பொருளாதார முறைமைகள் மட்டுமல்ல மனிதனுக்குரிய அனைத்தும் மீள் உற்பத்தி செய்யப்படல் வேண்டும்
கார்ள்மார்க்ஸ் கூட மீள் உற்பத்தி என்பதனைப் பொருளாதார முறைமைகளுக்கு அப்பால் மனிதன் சார்ந்த அனைத்தையும் மீள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே கூறினார் என்பது அவரின் இணைபிரியாத் தோழனான ஏங்கிள்சின் கருத்து. கூடவே மார்க்ஸ் சைவத்தை அன்பே சிவம் என்னும் அதன் அடிப்படைக்காகப் பாராட்டினார் என்பது பலர் அறியாத உண்மை. எனவே சைவசித்தாந்த நூல்கள் தமிழரின் தொன்மையான சைவசமயத்தின் சிந்தனைத் தொடர்ச்சி என்பதை மறவாது அதேவேளை இந்நூல்கள் தமிழில் பிறந்த மக்கள் படைப்புக்கள் ஆதலால் தமிழர்களின் சமுக பொருளாதா அரசியல் ஆன்மீக விடுதலைகளுக்கான கூறுகளையும் தம்முள் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு இவற்றை அறிவியல் அணுகுமுறையுடன் அணுகுகின்ற பொழுது இவை ஒரு காலத்தின் உற்.பத்திகளாக இருந்தாலும் இன்னொரு காலத்தை உற்பத்தி செய்யவும் இவற்றால் முடியும். இதற்கு எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருள் வழிகாட்ட அவனருளாலே அவன் தாள் வேண்டிஇ என்னுரையாக அல்ல இறைவன் தன்னுரையாக இதனை மாற்றியருளிட வேண்டும் என்றும் அவன் திருவடி போற்றி என் பணி தொடங்குகின்றேன்.

next episode

Related News