Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அஜித் படத்தில் நானா? அதிர்ச்சியில் ஆத்மிகா

அஜித் படத்தில் நானா? அதிர்ச்சியில் ஆத்மிகா

விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். ‘விஸ்வாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22ம் தேதி தொடங்க இருக்கிறது.
இப்படத்தின் நடிகை யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து, அறியும் ஆவலில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ‘மீசைய முறுக்கு’ நாயகி ஆத்மிகா ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதை கேட்ட அஜித் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
இதையறிந்த ஆத்மிகாவும் அதிர்ச்சியடைந்துள்ளார். அஜித் படத்தில் நானா? என்ன? எப்படி? எப்போது? என அதிர்ச்சியாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் கதாநாயகி யார் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி, தொடர்ந்து 5 மாதங்கள் நடக்க இருக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.(15)201707201429462875_Aathmika_L_AlbVPF


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *