Search
Friday 19 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா

இமயமலை கோவில்களுக்கு செல்லும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா வழிபாட்டு தலங்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இமய மலையில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். கங்கை நதிக்கரையில் உள்ள கோவில்களுக்கும் சென்றார். கேதார்நாத் கோவிலிலும் வழிபாடு நடத்தினார்.

அப்போது கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிந்து இருந்தார். நெற்றியில் குங்குமம், சந்தனம் பூசி இருந்தார். அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பொருத்தமான வரன் இன்னும் அமையவில்லை.

தெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். அனுஷ்கா நடித்து கடந்த வருடம் சி.3, ஓம் நமோ வெங்கடேசாய மற்றும் பாகுபலி முதல் பாகம், இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்தன. ஜனவரியில் பாக்மதி படம் வெளியானது. தற்போது புதிய படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை. கதை கேட்டு வருகிறார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *