Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘உத்தம வில்லன்’ இசை அல்பம் வெளியிடப்பட்டது

‘உத்தம வில்லன்’ இசை அல்பம் வெளியிடப்பட்டது

கமலஹாசனின் ‘உத்தம வில்லன் ‘ திரைப்பட இசை வெளியீடு நேற்று மாலை வெண்ணை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்றது.

உத்தம வில்லன்’ படத்தில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உத்தமன் என்ற 8ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரம், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரம் என கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *