Search
Friday 22 November 2019
  • :
  • :

‘உயிரே உயிரே’ பாடல் வெளியீட்டு படங்கள்

‘உயிரே உயிரே’ பாடல் வெளியீட்டு படங்கள்

2012 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற படம் இஷ்க், யாவரும் நலம் விக்ரம் குமார் இஷ்க் படத்தை தெலுங்கில் இயக்கி இருந்தார்.

இதன் ரீமேக் உரிமையை முன்னால் நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை ஜெயப்பிரதா வாங்கி இருந்தார். தனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகம் செய்ய இஷ்க் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய நடிகை ஜெயப்பிரதா, சத்யம் படத்தின் இயக்குநர் ராஜ்குமாரை தேர்ந்தெடுத்து இந்தப் படத்தை தமிழில் இயக்கச் சொன்னார்.

படத்தில் சித்துவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து பாதிப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். தற்பொழுது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரும் பிரபல அரசியல்வாதியுமான அமர்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *