Search
Tuesday 23 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு

எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு

எனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவித்து உள்ளார்.நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது.இதுகுறித்து பேட்டி அளித்த விஷால் “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.201901161212339096_Her-name-s-AnishaAlla-And-yes-she-said-yes-And-its_SECVPF

எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.” என்று கூறி இருக்கிறார்.

அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் நடிகர் விஷால் எனக்கு அனிஷாவுடன் திருமணம் என தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *