தலைப்பு செய்திகள்

“என் உருவத்தை கேலி செய்தனர்” -நடிகை ஸ்ரீபிரியா

“என் உருவத்தை கேலி செய்தனர்” -நடிகை ஸ்ரீபிரியா

அனைத்து மொழிகளிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விமர்சனங்களை சந்திக்கின்றன. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின.கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி உடை அணிவதாக சர்ச்சைகள் எழுந்தன. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைப்பதாக 2 பெண்கள் புகார் அளித்தனர்.இப்போது தனியார் தொலைக்காட்சியில் நடிகர் மா.கா.பா. ஆனந்தும், பிரியங்காவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மற்றவர்களின் உருவங்களை கேலி செய்யவதாக நடிகை ஸ்ரீபிரியா கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீபிரியா தெரிவிக்கையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம். மாற்றிக்கொள்வார்களா? ஒருவரை கேலி செய்து காமெடி செய்வது கேவலம். ஒருவரின் மூக்கை கேலி செய்வதும் எடையை கேலி செய்வதும் சரியில்லை. மா.கா.பா ஆனந்த், பிரியங்கா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள்.

மற்றவரை கேலி செய்து அசிங்கப்படுத்த உரிமை யார் கொடுத்தது?. உருவ கேலியை எதிர்ப்போம். என்னுடையை டுவிட்டரில் இணைந்து நிற்கும் அனைவரும் உருவ கேலியை எதிர்ப்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தி இருக்கிறேன். இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.” இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *