Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

என் வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை கோபத்தில் பொங்கும் சார்மி

என் வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை கோபத்தில் பொங்கும் சார்மி

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சார்மி. கடந்த சில வருடங்களாகவே சார்மி, இயக்குனர் புரி ஜெகநாத்தை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. சில சமயம் சார்மியை பற்றி பி.சி என சுருக்கமாக குறிக்கின்றனர். அவ்வப்போது சார்மியிடம், ‘புரியுடன் உங்களுக்கு என்ன தொடர்பு?’ என்று பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் கேட்டபோது கோபத்தில் பொங்கினார்.

பிறகு அவர் கூறியதாவது: என்னைப்பற்றி குறிப்பிடும்போது பி. சி என இரண்டு எழுத்தில் குறிப்பிடுகின்றனர். பி என்பது புரி, சி என்பது சார்மி என விளக்கமும் தருகின்றனர். அது தவறு. என் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுபற்றி எல்லோருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது என்னுடைய வாழ்க்கை.201804301004416316_Charmi-says-does-not-like-to-live-with-her-husband_SECVPF

இதில் ஒவ்வொருவரும் தலையிட முடியாது. நான் ஒரு நடிகை, புரி பிரபல இயக்குனர். எங்களை ஆண், பெண் பாலினத்தின்படியே பார்க்கிறார்கள். அதனால்தான் அப்படி பேசுகிறார்கள். நான் ஏதாவது விளக்கம் சொன்னாலும் அதை தவறு என்பதுடன் நம்ப மறுக்கிறார்கள். என் செலவை இந்த சமுதாயம் ஏற்கவில்லை, அவர்கள் எனக்கு வேலையும் தருவதில்லை.

சிலர் தவறாக நினைக் கிறார்கள் என்பதற்காக எனது வேலையை நான் பார்க்காமல் இருக்க முடியாது. மற்றவர்கள் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதைவிட அவரவர்கள் தங்களின் சொந்த வாழ்வில் கவனம் செலுத்தட்டும். இந்த விஷயத்தில் நான் இன்னும் ஆழமாக செல்ல விரும்பவில்லை. இவ்வாறு சார்மி கூறினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *