Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கஞ்சா சாமியாராக ஹன்சிகா சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு

கஞ்சா சாமியாராக ஹன்சிகா சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு

ஹன்சிகா துப்பாக்கி முனை, 100, மஹா ஆகிய படங்களில் நடிக்கிறார். துப்பாக்கி முனை படம் முடிந்து திரைக்கு வருகிறது. மஹா படத்தில் அவரது முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். ருத்ராட்ச மாலையும், காவி உடையும் அணிந்து கஞ்சா அடித்தபடி இருக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது.இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஹன்சிகா தோற்றத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சிலர் இப்படி ஒரு நடிகை போஸ் கொடுக்கலாமா? என்று எதிர்ப்புகளும் கிளப்பி உள்ளனர். ஏற்கனவே சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டருக்கு கண்டனங்கள் கிளம்பின. சுகாதார துறையும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் அந்த புகைப்படத்தை டுவிட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. இப்போது ஹன்சிகா புகைப்பிடிக்கும் படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஹன்சிகா தோற்றத்தை நடிகர் ஆர்யா டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அவருக்கு நன்றி மச்சான் என்று ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.

சர்ச்சை தோற்றம் குறித்து படத்தின் இயக்குனர் ஜமீல் கூறும்போது, “ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றத்தை விமர்சிப்பது முறையல்ல. அதை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். படத்தில் ஒருவர் மது அருந்துகிறார் என்றால் குடிகாரன் என்ற கதாபாத்திரத்துக்காக அதை செய்கிறார் என்று அர்த்தம். இதுவரை பார்க்காத ஹன்சிகாவை இந்த படத்தில் பார்க்கலாம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகிறது. ஸ்ரீகாந்தும் இதில் நடிக்கிறார்” என்றார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *