Search
Friday 17 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கமல் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான தலைவர்கள் தேவை-எஸ்.வி.சேகர்

கமல் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான தலைவர்கள் தேவை-எஸ்.வி.சேகர்

நடிகர் கமல்ஹாசன் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
எனவே, கமல் தீவிர அரசியலில் இறங்க தயாராகி விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்கள். அதனால் அவரை இன்று சந்தித்தேன். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். எனவே அவர் அரசியலுக்கு வர வேண்டும். கட்சி தொடங்க வேண்டும் என்று கூறினேன்.
கமல் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை.
மூப்பனார் அரசியல் கட்சி தொடங்கிய போது படித்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் கமல் கட்சி தொடங்கினால் படித்தவர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கும்.
மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். எனக்கும் கமலுக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு. எனவே, அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *